நான் உலகத்தில் பல மொழிகளை உணர வேண்டும்போல...!
எதையும் எதிர்பார்த்து தொடங்கவில்லை நம் நட்பு - ஆனால் தொடங்கியபின் ?
தூங்கும் பொழுதுகூட, நீ என்னையும் நான் உன்னையும் பார்த்து பார்த்து கவனித்து கொள்கிறோம்............!
ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம்? யாராவது கேட்டால்...
நீ என்னையும், நான் உன்னையும் நினைத்து கொண்டிருக்கும் நேரத்தை கணக்கிட்டு சொல்லிவிடதே ...நம் நினைவு 24 மணியும் தாண்டும்............!
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை - நீ திட்டுவதாய் கூறி எப்பொழுதும் ஏன் என்னை கொஞ்சுகிறாய்....?
நம் இருவருக்கும் ஓர் ஒற்றுமை ..
நம் இருவர்க்கும் கவிதை பிடிக்கும்- உனக்கு
நான் கிறுக்கியதும் , எனக்கு நீ கிறுக்கியதும் .................!
உன்னையும் என்னையும் விட்டு சென்றவர்கள் - உன்னை எனக்கும் ,
என்னை உனக்கும் விட்டு சென்றிருகிறார்கள் ..............!
காடுகளில் திரியும் நான்கு பணம் தின்னி கழுகுகள் ,
நம் உறவை தப்பாய் பேசியதற்க்காக நீ சிந்திய கண்ணீர் துளியின் தூய்மையின் மேல் ஆணை- என் உடலில் உணர்வு இருக்கும் வரை அந்த உணர்வில்
நீ இருப்பாய்....!!!!!!!!!

No comments:
Post a Comment