liv

Wednesday, October 31, 2012

உன் மௌனம்

இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டால்,
என் உயிர் பிரியுமோ பிரியதோ நான் அரியேன்- ஆனால்
நீ பேசாமல் மௌனமாய் இருந்தால், என் உயிர் பிரிவது நிச்சயம்...!

Wednesday, October 17, 2012

நீ என் கடவுளா?

நீ என் கடவுளா?
நான் யாரை பார்த்தாலும் நீயே தெரிகிறாய்...
நான் எதை நினைத்தாலும் நீயே வருகிறாய்...!
நீ என் குழந்தையா?
நீ திட்டினாலும் ரசிக்றேன்...
நீ அடித்தாலும் சிரிக்றேன்...!

நீ என் இதயமா?
நீ இயக்கினால் மட்டும் இயங்குகிறேன்...
நீ நிறுத்தினால் நான் இறக்கிறேன்...!

பனிரெண்டு ஆண்டுகள் காத்திருந்து பூ தரும் குறஞ்சி போல்,
பகல்லாம் காத்திருக்கிறேன் நீ தரும் இரவு முத்ததிற்காக...!



வாரத்தின் முதல் நாள் எதுவாக இருந்தாலும்,
உன்னை சந்திக்கும் நாளில்தான் என் வாரத்திற்கான முதல் நாள் பிறக்கிறது..
தினமும் உன் குறுஞ்செய்தி பார்த்தே எனக்கான நாள் விடிகிறது...



உன்னை சந்திக்க காத்திருக்கும் நான்கு நாட்களே என்னக்கு நானூறு வருடமாய் தோன்ற,
உன்னை கரம் பிடிக்க நான்கு வருடங்கள் காத்திருக்க சொல்கிரையே நீயாயமா?