liv

Saturday, March 2, 2013

என் காதல்

"காதல் " - அவ்வளவுதான், இதில் முதல் காதல் , இரண்டாம் காதல் என்பது எல்லாம் இல்லை...

முதலில் என்னை சந்திதவளுக்கு  அது  புரியவில்லை,
அடுத்து  நான் சந்திதவள்  அதை காதலிக்கின்றால் .......

அந்த இரண்டு இடத்திலும் இருந்தது, இருகின்றது என் காதல்தான்- என் ஒரே காதல்தான் ...!

ஒன்றை இல்லந்தால் என் காதல் பக்குவப்படவில்லை - மாறாக
அது இன்னும் சிறு குழந்தையாய் மாறி போய் இருக்கிறது...!

"காதல் " - அவ்வளவுதான், இதில் முதல் காதல் , இரண்டாம் காதல் என்பது எல்லாம் இல்லை...




  


 

உயிர் வலி

முதல் காதலின் வலி உயிர் போகும் வரை போகாது - என்று கூற கேட்டிருக்கிறேன் ,  இப்போது  உயிர் போனாலும் தேவலை ஆனால் அந்த நினைவு வலி போகாதபடி பார்த்துகொள்கிறேன்....!  உயிர் வலி 

வலி

நமக்கு பிறர் கொடுத்து வலியை - நாம்
மறந்தும்குட பிரறருக்கு கொடுத்துவிட கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருக்றேன்  இப்போது நான். .. !

Wednesday, October 31, 2012

உன் மௌனம்

இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டால்,
என் உயிர் பிரியுமோ பிரியதோ நான் அரியேன்- ஆனால்
நீ பேசாமல் மௌனமாய் இருந்தால், என் உயிர் பிரிவது நிச்சயம்...!

Wednesday, October 17, 2012

நீ என் கடவுளா?

நீ என் கடவுளா?
நான் யாரை பார்த்தாலும் நீயே தெரிகிறாய்...
நான் எதை நினைத்தாலும் நீயே வருகிறாய்...!
நீ என் குழந்தையா?
நீ திட்டினாலும் ரசிக்றேன்...
நீ அடித்தாலும் சிரிக்றேன்...!

நீ என் இதயமா?
நீ இயக்கினால் மட்டும் இயங்குகிறேன்...
நீ நிறுத்தினால் நான் இறக்கிறேன்...!

பனிரெண்டு ஆண்டுகள் காத்திருந்து பூ தரும் குறஞ்சி போல்,
பகல்லாம் காத்திருக்கிறேன் நீ தரும் இரவு முத்ததிற்காக...!



வாரத்தின் முதல் நாள் எதுவாக இருந்தாலும்,
உன்னை சந்திக்கும் நாளில்தான் என் வாரத்திற்கான முதல் நாள் பிறக்கிறது..
தினமும் உன் குறுஞ்செய்தி பார்த்தே எனக்கான நாள் விடிகிறது...



உன்னை சந்திக்க காத்திருக்கும் நான்கு நாட்களே என்னக்கு நானூறு வருடமாய் தோன்ற,
உன்னை கரம் பிடிக்க நான்கு வருடங்கள் காத்திருக்க சொல்கிரையே நீயாயமா?

Tuesday, May 1, 2012




என்னை விட்டு சென்றவள்,
ஏன் என்னிடம் அவள்  நினைவுகளை  மட்டும் விட்டு சென்றாள் ..?
தூக்கி வைக்கவும் முடியவில்லை, 
தூர வீசவும் முடியவில்லை ....!!!!


Wednesday, September 21, 2011

சுகம்-வலி

நினைவுகள்  சுகமானது  -உனக்காக  காத்திருக்கும்  போது  
நினைவுகள்  கொடுமையானது -நீ  வரமாட்டாய்  என்று  தெரிந்தும்
உனக்காக  காத்திருக்கும்பொழுது ..!

Saturday, August 27, 2011



எனக்கு   கைபேசி   பிடிக்கவில்லை - காதலில்  மட்டும் ...!

அவள்  அனுப்பும்  SMS முத்தம்  என்ன  கன்னத்தை  ஈரமாக்கவில்லை....!

Thursday, August 25, 2011

நான் இறக்கும்வரை


உன்னை   அணைத்துக்கொள்ள   ஆசைதான் -நீ  என்  தோழியாய் இல்லாவிட்டால் 
உன்னை முத்தமிட  ஆசைதான்-நீ என் தோழியாய் இல்லாவிட்டால் 
உன்னை பகிர்ந்து  கொள்ள ஆசைதான் -நீ என் தோழியாய் இல்லாவிட்டால்  
உன்னை ருசித்து   பார்க்க  ஆசைதான் - நீ என் தோழியாய் இல்லாவிட்டால்
இவை  அனைத்தையும்   விட  புனிதமானதை உணர்ந்துக்கொள்ள ஆசை -நீ மட்டும்   
என் தோழியாய் இருந்துவிடு  ....நான்  இறக்கும்வரை ...!

உயிர்



நீ  என்னுடன்  இருக்கும்போதும்  இல்லாத  போதும்  ஒரு  வித்தியாசம்தான்  
உயிருடன்  இருக்கிறேன் - உயிருடன் இருந்தேன் .....!